You are here:

BergenTamil.com

En Hjemmeside for tamilene i Bergen

Bergentamil

Fotball og Volleyball turnering [TSK]

பேர்கன் தமிழர் விளையாடுக் கழகம் இவ்வருடத்திற்கான முதலாவது உள்ளரங்க உதைபந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்ட போட்டிகளை  ஞாயிறு  12.02.2012 அன்று நடாத்த உள்ளார்கள் .  சிறுவர்கள், பெரியவர்களுக்கான உதைபந்தாட்டம். ஆண்கள், பெண்களுக்கான கரப்பந்தாடம் ஆகிய போட்டிகள் இத்தினத்தில் நடைபெறும்.
இப்போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் கழகங்கள் 09.02.2012 முன் தங்களது கழகங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றார்கள்.

காலம்: 12.02.2012
நேரம்: காலை 10 மணி
இடம்: Nordneshallen

தொடர்புகளுக்கு
Kannan 90827208

 

பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும்.

பொதுக்கூட்டமும்  கலந்துரையாடலும்.

 

 

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பேர்கனில் உள்ள தமிழ் மக்களுடனான கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்கள். இக்கூட்டத்தில் உப சபாநாயகர் அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார். மற்றும் பிரதமர் அவர்கள் காணொளி மூலம் கலந்து கொண்டு உரையாடுவார், மக்களது கேள்விகளிற்கு பதிலளிப்பார்.

இக்கூட்டத்தில் அனைவரயும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றனர்.

காலம்: சனிக்கிழமை 11.02.2012
நேரம்: மாலை 6 மணி
இடம்: Kultusalen, Vannkanten, Loddefjord.

தொடர்புகளுக்கு
Thomas Aloysius
91668547
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்.

 

Info fra Foodways

 

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களும், புதுவருட வாழ்த்துக்களையும் Foodways (Tamilshop) நிறுவனம் தெரிவித்துக்கொள்கிறது. 2012 ஜனவரி இல் இருந்து கடை திறக்கும் புதிய நேரம்.

திங்கள் - செவ்வாய் - 10.00 am - 18.00 pm
புதன் - சனி - 10.00 am - 20.00 pm.
ஞாயிறு - Stengt

எமது நிறுவனத்திற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி
மேலதிக தொடர்புகளுக்கு: 55232399

 

பேர்கன் வாழ் தமிழ் இளம் தளிர்களின் சாதனை!

 

பேர்கன் நகரில் Patrician Sports Clubஇன் ஆதரவில் தினமும் ஞாயிறு தோறும் பாட்மிண்டன் பயிற்சிகள் நடைபெறுவது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

கடந்த கிழமைகளில் பேர்கன் நகரில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் (Vestlandsmesterskapet på Askøy (19.-20. nov. 2011) og Kretsmesterskapet på Sotra (10.-11. des. 2011) Vinothkumar Balasingam, Keveenkumar Balasingam, BharathKumar Balasingam, Joshua Aloysius, Jordan Aloysius, Abira Paramsothy, Dillp.Balasingam/Chandrakumar Paramsothy ஆகியோர் பங்குபற்றி வெகு சாதனைகளை பெற்றுள்ளார்கள்.

இவர்களுக்கு எமது வாழ்த்துக்கள் !

http://www.ba.no/sport/article5861662.ece

 

தமிழ் விக்கி ஊடக போட்டி

PDF வடிவில்

விதி முறைகள்

 

இளைஞர் கலைக்குழு

பேர்கனில் வாழும் அன்பார்ந்த இளைஞர்களே, வாருங்கள் நாம் ஒன்றிணைந்து
பட்டிமன்றம் / விவாதஅரங்கு / கலந்துரையாடல்
நாடகம்
இசைநிகழ்ச்சி
நடனம்
போன்ற பல்வேறுபட்ட கலைநிகழ்ச்சிகள் மூலம் நாம் எதிர்நோக்கும் சமுக விடயங்களை வெளிக்கொணர்வோம். உங்களின் கருத்துக்கள் முக்கியமாக இங்கு எதிர் பார்க்கப் படுகின்றது.
ஆர்வமுள்ள இளைஞர்கள் அனைவரும் தயவு செய்து எம்முடன் தொடர்பு கொள்ளவும்

தொடர்புகட்கு:
Mira: 46843840
Jeninten: 95903262
karthika: 94130439
Gayane: 94117823

தகவல்: கஜனி

 

தேன் தமிழ் ஓசை வானொலியின் 20 வது வருட ஆண்டு மலர்

தேன் தமிழ் ஓசை வானொலியின் 20 வது வருட நிறைவு விழாவில் வெளியிடப்பட்ட 20 வது ஆண்டு மலர்.

 

முதியோர்களுக்கான ஒன்றுகூடல்

பேர்கனில் வசிக்கும் எமது முதியோர் மற்றும் ஒய்வுபெற்றோர்களின் நலன் கருதி அவர்களிற்கான பொழுது போக்கு அம்சங்களுடனான சந்திப்புகளையும்,ஒன்று கூடல்களையும், கிரமமான முறையில் நடாத்துவதற்கான ஆலோசனை பெரும் வகையில் இவர்களிற்கான சந்திப்பொன்றை தமிழர் விளையாட்டுக் கழகம் ஒழுங்கு செய்துள்ளது. இக்குழுவில் தங்களையும் இணைக்க விரும்புவோர் கீழ் கண்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

திரு.தோமஸ் 91668547
திரு. பயஸ் 91713213

ஒழுங்குகள்
தமிழர் விளையாடுக்கழகம்.

 
Side 1 av 5

Aktiviteter

Februar
Mars
Mai
Juni
September
Oktober
Desember
View full calendar

பொதுக்கூட்டமும்

கலந்துரையாடலும்
Lørdag 11/02-12 kl. 18

Badminton Trening
Hver søndag Kl. 15

Hvem er i online

Vi har 4 gjester her nå