You are here:

BergenTamil.com

En Hjemmside for tamilene i Bergen

Nikon நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய சாதனம்

E-post Skriv ut PDF

மக்களை மாயமாக கட்டி இழுக்க, எத்தனையோ முயற்சிகளை போட்டிபோட்டு செய்துகொண்டு இருக்கிறது தொழில்நுட்ப உலகம்.புதிய கற்பனைகள், கவர்ச்சிகள், வசதிகள் என வியாபார உத்திக்காகத்தான் இவை கொண்டுவரப்படுகின்ற போதும், சின்ன குழந்தைகளிடம் இருந்து இளைஞர்கள் முதியவர்கள் வரை,இதற்கு அடிமையாக்க தவறுவதில்லை.
தற்போது இதே பாணியில் பார்த்தவுடன் பற்றிக்கொள்வது போல, வாங்கிவிடுவதற்கு ஆசை வரத்தூண்டும், புதிய சாதனங்கள் சந்தைக்கு வந்துள்ளன.

தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்!

Nikon Coolpix S1000pj

உலகின் முதலாவது புரொஜெக்டருடன் கூடிய டிஜிட்டல் கமெராவினை (first compact digital camera built-in projector) நிக்கொன் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.  'Nikon COOLPIX S1000pj ' எனப்பெயரிடப்பட்ட இக்கமெராவினை கொண்டு, நீங்கள் எடுக்கும் புகைப்படத்தினை, பெரிதாக்கி எந்த திரையிலும் உடனுக்குடன், பார்வையிடலாம்.

இதுவரை கமெரா திரையில் மாத்திரமே இந்த வசதி இருந்தது. இப்புதிய வசதியை ஏற்படுத்திக்கொடுத்திக்கொடுத்துள்ள இக்கமெரா கடந்த மாதம் முதலே சந்தைக்கு வந்தது.இதை பற்றி சொல்லித்தெரிந்து கொள்வதை விட நீங்களே வீடியோவில் பாருங்களேன்! முடிந்தால், பணமிருந்தால், ஆசையிருந்தால், யாரும் திட்டமாட்டார்களானால் வாங்கிடுங்க!

Sist oppdatert ( fredag 26. februar 2010 09:28 )  

Legg til kommentar

Sikkerhetskode
Vis ny kode