-8.6 C
Norway
Friday, December 6, 2024

அதிக எதிர்பார்ப்பை கிளப்பிய அரபிக்குத்து பாடலை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதனால் இப்படத்தினை பற்றிய தகவல் வெளியிடாமல் படக்குழுவினர் சரியான நேரத்தில் ஒரு சில அப்டேட் மட்டுமே வெளியிட்டு வந்தனர். இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தனர்.

சமீபத்தில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதிய அரபி குத்து பாடலை நெல்சன் திலீப்குமார் உடன் படக்குழுவினர் அரபி குத்து என்ற பாடல் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டனர். பாடல் வெளியான சில மணி நேரத்திலேயே பெரிய அளவில் வைரலானது.

அனிருத் இசையமைத்துள்ள அரபி குத்து பாடலை காதலர் தினத்தன்று வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த பாடலில் இடம்பெற்ற வார்த்தைகள் ரசிகர்களுக்கு புரியும் வகையில் இல்லாவிட்டாலும் ரசிக்கும் வகையில் இருந்துள்ளது. தற்போது இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்