21.7 C
Norway
Friday, September 22, 2023

அருண் விஜய் – ஹரி இணையும் ‘யானை’

அருண் விஜய் நடிப்பில், டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரித்து வரும் பிரம்மாண்ட படைப்பு யானை.

தமிழ்த் திரையில் இடையறாத உழைப்பினால் அசத்தி வரும் நாயகன் அருண் விஜய், தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குநராக வெற்றிநடைபோடும் இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் ‘யானை’ எனும் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நடிகர் அருண் விஜய்யுடன் நடிகர்கள் ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், ஜெயபாலன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நடிகர் அருண் விஜய் இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளதாக கூறப்படுவதுடன், இந்த படம் கிராமம் மற்றும் நகர பின்னணியில், இயக்குநர் ஹரிக்கே உண்டான விறுவிறுப்பான திரைக்கதையுடன் அட்டகாசமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

இப்படத்திற்காக இராமேஸ்வரத்தில் தீவு போன்ற பிரமாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டதுடன், தூத்துகுடி, காரைக்குடி, பழனி மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். அந்தோணி எடிட்டிங் செய்துள்ளார். அனல் அரசு சண்டை பயிற்சியை அளிக்க, பாபா பாஸ்கர் மற்றும் தினா நடனம் அமைத்துள்ளனர். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை சந்தியா கிஷோர்குமார் இணை தயாரிப்பு செய்துள்ளார்.

இந்நிலையில் இந்த திரைப்படம் வரும் மே மாதம் 6-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்