20.7 C
Norway
Saturday, September 14, 2024

அர்ஜென்டினா அணியினருக்காக ரூ.1.73 கோடி மதிப்பில் 35 கோல்ட் ஐபோன்களை ஆர்டர் செய்த மெஸ்ஸி

கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி, சக அர்ஜென்டினா வீரர்களுக்காக சுமார் 1.73 கோடி ரூபாய் மதிப்பிலான 35 கோல்ட் ஐபோன்களை ஆர்டர் செய்துள்ளதாக தகவல். இந்த போனை அவர்களுக்கு அன்பு பரிசாக வழங்க மெஸ்ஸி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

கடந்த ஆண்டு உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி. கத்தார் நாட்டில் நடைபெற்ற இந்த தொடரில் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி வாகை சூடி இருந்தது அர்ஜென்டினா. இந்த நிலையில் உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியில் இடம் பிடித்திருந்த வீரர்கள் மற்றும் அணியின் மற்ற உறுப்பினர்களுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கோல்ட் ஐபோனை மெஸ்ஸி வழங்க உள்ளாராம்.

இந்த போன்களில் வீரர்களின் பெயர், ஜெர்சி எண் மற்றும் அர்ஜென்டினா அணியின் லோகோ போன்றவை பொறிக்கப்பட்டுள்ளதாக தகவல். வீரர்களுக்கு பிரத்யேக சிறப்பு பரிசு கொடுக்க வேண்டும் என்ற யோசனையில் மெஸ்ஸி இருந்துள்ளார்.

உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு தங்களை மெஸ்ஸி தொடர்பு கொண்டதாவும். அதன்போது வழக்கமாக பரிசாக கொடுக்கப்படும் வாட்ச் போன்றவை வேண்டாம் என அவர் சொன்னதாகவும். அதன்படி கோல்ட் ஐபோன் யோசனையை தங்கள் தரப்பில் கொடுத்தாகவும் ஐடிசைன் கோல்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பென் தெரிவித்துள்ளார்.

ஐபோன் கோல்ட்: ஐடிசைன் கோல்ட் எனும் நிறுவனம் பிரத்யேகமாக கஸ்டமைஸ் செய்யப்பட்ட கலைத்துவம் மிக்க கோல்ட் ஐபோன்கள் மற்றும் மொபைல் கேஸ்களை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறது. தற்போது மெஸ்ஸி கொடுத்த ஆர்டரின் பேரில் 35 கோல்ட் ஐபோன்களை வடிவமைத்து அவரிடம் வழங்கியுள்ளது. மெஸ்ஸி, ஐபோன் 14 மாடலை ஆர்டர் செய்ததாக தெரிகிறது.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்