12.4 C
Norway
Saturday, September 14, 2024

இதய அஞசலி – பேர்கன் அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம்

அன்பின் றொபேட் தயானந்தன் அவர்கள்

‘தயா அண்ணை’ என்று எம்மவரால் மரியாதையாயும் அன்பாயும் அழைக்கப்பட்ட, றோபேர்ட் தயானந்தனின் திடீர் மறைவு பேர்கன் அன்னை பூபதி கலைக்கூடக் குடும்பத்தை ஆழாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.

தயா அண்ணை, தன்மக்கள் மேல் அக்கறை கொண்ட ஒரு ஆளுமை. அன்னை பூபதி பேர்கன் வளாகம் பேர்கனில் உருவாக மிகவும் அக்கறைகாட்டியவர். 2002 ஆம் ஆண்டு தொடக்கம், பல ஆண்டுகள் கணிதப் பாடத்தைக் கற்பித்ததுடன், அன்னை பூபதி வளாகத்தின் உயர்வகுப்பு மாணவர்களுக்கான கல்வியை ஒருங்கிணைக்கும் பொறுப்பையும் வகித்தார்.

தான் எடுத்த பொறுப்பை, நேர காலம் பாராமல் செவ்வனே செய்யும் ஒரு சிறந்த நிர்வாகி. பேர்கன் வாழ் தமிழர்க்காகவும், தாயக மக்களுக்காகவும் பல்வேறு அமைப்புகளிலும் பங்களித்த ஒரு சமூக அக்கறை கொண்ட ஒரு பணியாளர். சலிப்பின்றி, கடமையைச் செய்துமுடிப்பதில் தீவிரம் காட்டும் ஒரு அரிய பொறுப்பாளன். தயா அண்ணையின் மறைவு எம்மவர்க்கெல்லாம் ஒரு பேரிழப்பு.

அன்பு தயா அண்ணை, போய் வாருங்கள்!
எம்மக்கள் மேலான உங்களின் அக்கறையும், 45 வருடங்களுக்கு மேலான உங்கள் சமூகப் பணியும் என்றென்றும் எம் நினைவில் நீங்காதிருக்கும்!

ஆசிரியர்கள், மாணவர்கள், நிர்வாகம்,
பேர்கன் அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம்

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்