23.1 C
Norway
Monday, October 2, 2023

உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய தமிழ் சிறுவன்

தற்போதைய உலகின் நம்பர் ஒன் செஸ் பிளையர் யார் என்றால், அது மக்னஸ் கார்ல்சன் ஆவார். அவர் சமீபத்தில் மைக்ரோ சாஃப் சூப்பர் கம்பியூட்டரோடு விளையாடி, சூப்பர் கம்பியூட்டரையே திணறடித்து செஸ் போட்டியில் வென்றவர். இதனால் உலகில் உள்ள சூப்பர் கம்பியூட்டரை விட அவருக்கு மூளை அதிகம் என்று உலகமே அவரை பாராட்டியது. ஆனால் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் அவரையே (மக்னஸ் கார்ல்சனை) போட்டிக்கு அழைத்தார், பிரக்-ஞானந்தா என்ற 16 வயதுச் சிறுவன். வெறும் 16 வயது நிரம்பிய தமிழ் நாட்டைச் சேர்ந்த சுத்தத் தமிழன் பிரக் ஞானந்தா. அவருக்கும் மக்னசுக்கு நடந்த செஸ் போட்டியில், அபாரமாக விளையாடிய பிரக் ஞானந்தா, மக்னசை அதிர்ச்சி தோல்வியடைய வைத்தார். உலகமே தற்போது இந்த 16 வயது தமிழ் சிறுவனைப் பற்றித் தான் பேசி வருகிறது….

தமிழக முதல்வர் அவரை அழைத்து பாராட்டியுள்ளார். சூப்பர் கம்பியூட்டரை வென்ற தமிழன் என்று பாராட்டியுள்ளார். உலகின் மூத்த குடிகளான தமிழர்கள் எந்த அளவு அறிவு ஜீவிகள் என்பதற்கு இதுவே ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும்.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்