20.7 C
Norway
Saturday, September 14, 2024

உலகில் விலைவாசி அதிகமுள்ள நகரங்கள் பட்டியலில் நான்கு சுவிஸ் நகரங்கள்

உலகிலேயே வெளிநாட்டவர்கள் வாழ அதிக செலவு பிடிக்கும் நகரங்களின் 2022ஆம் ஆண்டுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது.

அந்தப் பட்டியலில் நான்கு சுவிஸ் நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

உலகிலேயே வெளிநாட்டவர்கள் வாழ அதிக செலவு பிடிக்கும் நகரங்களின் 2022ஆம் ஆண்டுக்கான பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், அந்தப் பட்டியலில் சுவிஸ் நகரங்கள் நான்கு இடம்பெற்றுள்ளன.

பட்டியலில் தொடர்ச்சியாக முதலிடம் பெற்று வரும் ஹொங்ஹொங்கைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தின் சூரிச், ஜெனீவா, பேசல் மற்றும் Bern ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த நான்கு இடங்களைப் பெறுள்ளன.

இந்த செய்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் என்னவென்றால், உலகின் அதிக விலைவாசியுள்ள நகரங்களான சூரிச்சும் ஜெனீவாவும், உலகில் வாழச் சிறந்த நாடுகள் பட்டியலிலும் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளதுதான்.

அதே நேரத்தில், விலைவாசியின் அடிப்படையில், குறைந்த விலைவாசி உள்ள நகரங்களில், கூடவே உயர்ந்த வாழ்க்கைத் தரமும் கொண்ட நகரங்களாக, கனடாவின் வான்கூவரும் ரொரன்றோவும், ஜேர்மனியின் பிராங்க்பர்ட்டும், ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமும் பெயர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்