-6.3 C
Norway
Friday, December 6, 2024

ஏலத்திற்கு வருகின்றது உலகின் மிகப்பெரிய வெள்ளை வைரக்கல்!

ஜெனீவாவில் வரும் புதன்கிழமை உலகில் மிகப்பெரிய “வெள்ளை வைரக்கல்” (white diamond) ஏலம் விடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தி ரொக் என்று அழைக்கப்படும் இந்த வைரம் 30 மில்லியன் டொலர் அல்லது அதற்கு மேல் ஏலம் போகலாம் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

228.31 கரட் எடை உள்ள பேரிக்காய் வடிவிலான இந்த வைரம் தற்போது அடையாளம் வெளியிடப்படாத வட அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமாக உள்ளது.

இந்நிலையில் இந்த வைரம் ஏலத்தில் சாதனைத் தொகைக்கு விலைபோகலாம் என்று நம்பப்படுகிறது. இந்த வைரம் 2000களின் ஆரம்பத்தில் தென்னாபிரிக்காவில் உள்ள சுரங்கம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டு 163.41 கெரட் வெள்ளை வைரம் கிறிஸ்டி ஏலவிற்பனையகத்தால் 33.7 மில்லியன் டொலர்களுக்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வைரக்கல்லையும் கிறிஸ்டி ஆபரணத் திணைக்களமே ஏலம் விடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்