9.1 C
Norway
Thursday, October 3, 2024

கமலஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு விலையுர்ந்த காரை பரிசாக அளித்தார்

நடிகர் கமலஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு விலையுர்ந்த காரை பரிசாக அளித்த தகவல் தீயாய் பரவி வருகிறது.

கடந்த ஜூன் 3 ம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் நடிப்பில் வெளியான படம் தான் விக்ரம்.

வசூல் சாதனை
படம் வெளிவந்த முதல் நாளில் இருந்தே ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பெரும்பாலான திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

நாளுக்கு நாள் திரையரங்குக் காட்சிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் வசூலும் அதிகரித்து வருகிறது. முதல் மூன்று நாள்களில் உலகம் முழுவதும் ரூ. 175 கோடி வசூலாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், 4 வருடங்களுக்கு பின் கமலின் இந்த படம் வெளியாகியதால் அவரின் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதற்கு படக்குழுவினர் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனராஜிற்கு மதிப்பளிக்கும் விதமாக கார் மற்றும் பைக்கை பரிசளித்து ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

சொகுசு கார் பரிசு
அதன்படி, ஜப்பானின் டொயோட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான சொகுசு காரான லெக்ஸஸை லோகேஷ் கனகராஜுக்குப் பரிசாக வழங்கிக் கெளரவித்துள்ளார்.

இந்த கார்கள் பெட்ரோல் மற்றும் மின்சாரம் இரண்டிலும் இயங்கும் ஹைபிரிட் கார்கள். லெக்சஸ் காரின் குறைந்த வேரியன்டின் விலை ரூ. 60 லட்சத்திலிருந்து ஆரம்பமாகி ரூ. 2.50 கோடி வரை செல்கிறது.

காரின் சிறப்பு அம்சம்
லோகேஷிற்கு கமல் கொடுத்த காரின் விலை toyota lexus es300h மாடலாக இருக்கும். அதன் விலை 70 லட்சம் இருக்கும் எனக்கூறப்படுகிறது.

இந்த விலையில் தான் வாங்கி கொடுத்துள்ளாரா? என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். மேலும் உதவி இயக்குனர்கள் 13 பேருக்கு Apache RTR 160 மோட்டார் பைக்கை பரிசாக அளித்துள்ளார்.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்