9.1 C
Norway
Thursday, October 3, 2024

குட்டிகளுக்கு சாப்பாடு வழங்கிய பெண்! நன்றி கூறி பாசத்தை வெளிக்காட்டிய நாய்

நாயின் குட்டிகளுக்கு உணவளித்த பெண்ணிற்கு நாய் தனது பாணியில் நன்றி கூறி பாசத்தினை வெளிக்காட்டிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நாய்களுக்கு உணவளிக்கும் பெண்
வீடுகளில் செல்லமாக வளர்க்கப்படும் நாய்களுக்கு அதன் உரிமையாளர்கள் விதவிதமாக பிடித்த உணவுகளை வழங்கி பாசமாக பார்த்துக்கொள்வார்கள்.

ஆனால் தெருக்களில் வளரும் நாய்களை அவ்வாறு யாரும் கண்டு கொள்வதில்லை. இதனால் தனது பசிக்கு உணவினை பெறுவதும் அதற்கு போராட்டமாகவே இருக்கின்றது.

இங்கு பெண் ஒருவர் சைக்கிளில் உணவினைக் கொண்டு வந்து நாய்களுக்கு கொடுக்கும் காட்சி பலரது இதயங்களையும் கவர்ந்து வைரலாகி வருகின்றது.

நாய் கூறிய நன்றி
இந்த வீடியோவுடன் “தாய் நாயானது தனது குட்டிகளுக்கு உணவளித்த பெண்ணுக்கு நன்றி கூறுகிறது” என்ற கேப்ஷனும் பதிவிடப்பட்டு இருக்கிறது.

அந்த வீடியோவில் பெண் ஒருவர் தரையில் படுத்துக்கொண்டிருக்கும் நாய்களுக்கு உணவளிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். ஒரு பையில் உணவை வைத்துக்கொண்டு அந்த நாய்க்குட்டிகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக உணவை அள்ளி போடுகிறார்.

அப்போது அவர் அருகில் நின்ற அந்த நாய்க்குட்டியின் தாயானது, அப்பெண்ணின் பின்னே சுற்றிக்கொண்டு அவருக்கு தனது பாஷையில் நன்றி கூறி பாசத்தினை வெளிப்படுத்தியுள்ளது.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்