-1.5 C
Norway
Sunday, December 10, 2023

சங்கம் விளையாட்டுக் கழகம்

கடந்த ஆறு ஆண்டுகால உழைப்பின் பயனாக, சங்கம் விளையாட்டுக் கழகத்திற்கு 550 பார்வையாளர்கள் அமரக்கூடிய விளையாட்டு அரங்கம் ஒன்றினை நிர்வகிக்கும் ஒப்பந்தமொன்றினை ஒஸ்லோ நகரசபையினர் வழங்கியுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த உள்ளரங்கமானது விளையாட்டு மைதானம், கூட்டங்கள் நடத்துவதற்கான வசதிகள், சிற்றுண்டிச்சாலை என்பவற்றைக் கொண்டுள்ளது.
தமிழ்ச் சங்கத்தினால் 1987ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட விளையாட்டுப் பிரிவே 2020ஆம் ஆண்டு தொடக்கம் சங்கம் விளையாட்டுக்கழகம் என்ற பெயரில் இயங்கிவருகிறது.
இவ் ஒப்பந்மானது தமிழ்ச் சங்கத்தின் மற்றும் சங்கம் விளையாட்டுக்கழகம் ஆகியவற்றின் செயற்பாடுகளில் எட்டப்பட்ட முக்கிய மைல்கல் எனலாம்.
கடந்த ஆறு ஆண்டுகளாக இத்திட்டத்திற்கு உழைத்த அனைவருக்கும் நாம் நன்றிகூறும் இவ்வேளையில், இத்திட்டத்திற்காக அயராது உழைத்த அமரர் தவேந்திரன் குகதாசன் அவர்களையும் நினைவுகூர்கிறோம்.
விளையாட்டின் மூலம் ஒரு பல்சமூகத்தின் இணைந்த வாழ்வுக்கும், ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் சேவையாற்ற முடியும் என்று நாம் நம்புகிறோம்.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்