-8.6 C
Norway
Friday, December 6, 2024

சாதனை படைத்த உலகின் நீளமான கார்

நீச்சல் குளம், விளையாட்டு அரங்கம் என வசதிகளுடன் உலகின் நீளமான கார் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆம் நீச்சல் குளம், ஜக்குஸி, குளியல் தொட்டி, மினி-கோல்ப் மைதானம், ஹெலிபேட் உள்ளிட்ட சகல வசதிகளுடன் உள்ள கார் 26 சக்கரங்களையும் 10 அடி நீளமும் உள்ளது.

நீளமான கார்
அமெரிக்காவை சேர்ந்த ஜே ஓர்பெர்க் என்பவர் 60 அடி நீளமுடைய ‘அமெரிக்கன் டிரீம் கார்’ என பெயரிடப்பட்ட காரை 1980-களில் உருவாக்கினார். குட்டி ரயிலை போல் தோற்றம் கொண்ட அந்த கார் உலகின் மிக நீளமான காராக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது.

லிமோ ரகத்தை சேர்ந்த இந்த காரின் முன் மற்றும் பின் புறத்தில் V8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ள நிலையில், இரண்டு பக்கங்களில் இருந்தும் இயக்கமுடியுமாம்.

பல சிறப்பம்சங்களை உள்ளடக்கிய அமெரிக்கன் டிரீம் கார் ஒருகட்டத்தில் கைவிடப்பட்டு பரிதாபமான நிலைக்கு சென்றது. ஒழுங்கான பராமரிப்பு இல்லாததால் சக்கரங்கள், காரின் ஜன்னல்கள் கடும் சேதமடைந்தன.

இந்நிலையில் மேனிங் என்பவர் பிரபல இணைய வழி வர்த்தக இணையதளமான eBay மூலமாக இதனை விலைக்கு வாங்கினார். ஆனால் சில மாதங்களிலேயே இதனை மீண்டும் விற்பனை செய்ய மேனிங் முயன்றார்.

அவரிடம் இருந்து புளோரிடாவில் உள்ள டெசர்லாண்ட் பார்க் கார் அருங்காட்சியகத்தின் உரிமையாளரான மைக்கேல் டெசர் ‘அமெரிக்கன் டிரீம் கார்’-ஐ வாங்கினார்.

புளோரிடாவில் இருந்து 2 பாகங்களாக பிரிக்கப்பட்டு இந்த கார் ஓர்லாண்டாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் இதன் பெயர் ‘அமெரிக்கன் டிரீம் கார்’ என்பதிலிருந்து ‘சூப்பர் லிமோசின்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த காரை சீரமைக்க இந்திய மதிப்பில் சுமார் 2 கோடி ரூபாய் செலவானதாக கூறப்படுகிறது.

26 சக்கரங்களை கொண்டுள்ள இந்த கார் 100 அடி நீளம் கொண்டுள்ளது. நீச்சல் குளம், ஜக்குஸி, குளியல் தொட்டி, மினி-கோல்ப் மைதானம் மற்றும் ஒரு ஹெலிபேட் கூட இந்த காரில் இடம் பெற்றுள்ளது.

ஒரே நேரத்தில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் இதில் பயணம் செய்ய முடியும். தனிப்பட்ட உபயோகத்திற்காக ஒரு மணி நேரத்திற்கு 50 டாலர் முதல் 200 டாலர் வரை கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்