0.2 C
Norway
Thursday, February 19, 2026

சிறப்பாக நடைபெற்ற விருத்தப் பாமழை ஆயிரம் கவிதை நூல் வெளியீடு

கவிதை நூல், விருத்தப் பாமழை ஆயிரம், அறிமுகம்!

விருத்தப் பாமழை ஆயிரம் என்ற கவிதை நூல் அறிமுக நிகழ்வு நோர்வே தமிழ்ச் சங்கத்தால் நேற்றைய நாளில்(23.08.2025) மிகச் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வின் தலைமை உரையை திருவாளர் பிளேவியஸ் அவர்கள் ஆற்றயிருந்தார். இந்நிகழ்வில் நோர்வே வாழ் தமிழ்மக்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள். இந்நிகழ்வில் செல்வி ப. பவுஸ்ரினா, இறை வணக்கப் பாடலை இசைத்தார்.

அருட்தந்தை றெனே பீஸ்மன் அறிமுக உரையை‌ ஆற்றினார். திருவாளர் சுகந்தன் சிவநேசன், செல்வி றி. கத்லின், பேராசிரியர் வே. தயாளன் ஆகியோர் நூலைப்பற்றிய விமர்சன உரையை மிகச் சிறப்பாக நிகழ்த்தி இருந்தார்கள்.

அருட்தந்தை ப. விமல்ராஜ் ஆய்வுரையை ஆற்றி இருந்தார். நிகழ்ச்சித் தொகுப்பாளராக திருவாளர் அன்ரனி ஜூலியஸ் அவர்கள் செயற்பட்டிருந்தார்.

மிகச் சிறப்பாக இந்நிகழ்வு இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர் மண்ணிலே தமிழ் மொழியின்பால் கொண்டிருக்கின்ற ஆர்வத்தைக் கண்டுகொள்ளக் கூடியதாக இருந்தது.

தமிழ்மொழியை வளர்க்க வேண்டும், தமிழ் மொழி வளர்வதால், தமிழ் பேசும் மக்களாகிய நம் வாழ்வியல் உயரும் என்பதில் புலம்பெயர் தமிழ்மக்கள் எவ்வளவு துணிச்சலோடு பல்வேறுபட்ட முயற்சிகளை பல்மொழி பேசுகின்ற பல்பண்பாட்டுச் சூழலில் முன்னெடுத்து வருகிறார்கள் என்பதையும் நேரடியாகப் பார்க்கக் கூடியதாக இருந்தது.

நம்முடைய மொழி வாழுகிறபோதுதான் நாம் சிறப்பாக வாழமுடியும் என்பதைக் கண்டுகொள்கிறபோது நம்முடைய வாழ்வு சிறக்கும், நம்முடைய வாழ்வியல் உயரும் என்பதை புரிந்துகொண்டு நம்முடைய தொடர் முற்சிகளிலே ஈடுபடுவோம்.

நோர்வே தமிழ்ச் சங்கத்திற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை இவ்வேளையிலே தெரிவித்து நிற்கிறேன்.

செ. அன்புராசா

(படங்கள்: யோ. யசிந்தன்)

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்