-6.3 C
Norway
Friday, December 6, 2024

சுவரின் வழியாக துல்லியமாக பார்க்க உதவும் கேமராக்கள் கண்டுபிடிப்பு

இஸ்ரேலில் உருவாக்கப்பட்டுள்ள சுவர்கள் வழியாக பார்க்க உதவும் கேமராக்கள் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது.

இஸ்ரேலைச் சேர்ந்த கேமரோ-டெக் நிறுவனம் உருவாக்கிய Camero-Tech Xaver 1000 எனும் கேமராக்கள் அடுத்த தலைமுறைக்கான நவீன கையடக்க, உயர்-செயல்திறன் கொண்ட இமேஜிங் அமைப்பை உருவாக்கியுள்ளது.

இராணுவப் படைகள், சட்ட அமலாக்கத் துறையினர், புலனாய்வு பிரிவுகள் போன்றவற்றுக்கான செயல்திறன் இதன் மூலம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

Camero-Tech Xaver 1000 ஆனது 3D ‘சென்ஸ்-த்ரூ-தி-வால்’ திறனைக் கொண்டுள்ளது, இவற்றைக் கொண்டு 100 மீட்டர் தூரம் வரை சுவர்கள் மற்றும் தடைகளுக்குப் பின்னால் உள்ளவற்றை கண்டறிந்து பார்க்க முடியும் என கூறப்படுகிறது.

மேலும் தடைகளுக்கு பின்னால் உள்ள மனிதர்களோ பொருட்களோ , அவற்றின் உயரம், அளவு , நிற்கிறதா நகர்கிறதா என்பது வரை துல்லியமாக கண்டறிய முடியும்.

இந்த தொழில்நுட்பம் முற்றிலும் கதிர்வீச்சு இல்லாதது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்