30.1 C
Norway
Tuesday, May 30, 2023

தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட குட்டி! நொடிப்பொழுதில் காப்பாற்றிய தாய் யானை

உலகில் எந்த வகை உயிரினமாக இருந்தாலும் சரி, அதன் குட்டிகள் மீது தாய் வைத்திருக்கும் பாசம் வார்த்தையால் கூறமுடியாதது.

மனிதர்கள் ஆனாலும் சரி, விலங்குகள் ஆனாலும் சரி தனது குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்பட்டால் காக்கும் அரணாக தாய் செயல்படுவார்கள்.

இதனை உணர்த்தும் விதமாக தற்போது ஒரு வீடியோ இணையத்தில் பரவி வைரலாகியுள்ளது, மேலும் இந்த வீடியோ பலரின் இதயங்களையும் கவர்ந்து இருக்கிறது.

அந்த வீடியோவில் யானை கூட்டங்கள் காட்டுக்குள் செல்ல சென்று கொண்டிருக்கும் போது இடையே ஆறு ஒன்றினை கடந்து செல்கின்றது.

அத்தருணத்தில் அனைத்து யானைகளும் கரையேறிய பின்பு தனது குட்டியுடன் தாய் யானை மட்டும் கடந்து சென்றுள்ளது. அத்தருணத்தில் குட்டி யானை தண்ணீரின் வேகத்தில் நிலைகொள்ள முடியாமல் சில அடிகள் அடித்துச் செல்லப்பட்டது.

ஆரம்பத்தில் கவனிக்காத தாய் யானை பின்பு சுதாரித்துக் கொண்டு தனது குட்டியைக் காப்பாற்றி கரையேறியுள்ளது. இக்காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

 

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்