13.3 C
Norway
Friday, September 22, 2023

தண்ணீர் அருந்துவதற்கு குருவி செய்த காரியம்! வைரல் காட்சி

அறிவியில் இல்லாத இடமே இல்லை. நாம் செய்கிற ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் அறிவியல் இருக்கிறது. குறிப்பாக, இயற்பியல் இருக்கிறது. வெறுமனே பார்த்தால் அது என்ன? என்று கேட்பீர்கள்.

ஆனால், ஒரு பொருளை நகர்த்துவதற்கும், ஒரு பொருளை தூக்குவதற்கும் பின்னணியில் இருக்கும் இயற்பியலை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அறிவியலாளர்கள் கண்டுபிடித்து சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள். அதற்கு இப்போது என்ன? என கேட்கிறீர்களா? காரணம் இருக்கிறது.

அறிவியலின் சில விஷயங்களை நீங்கள் தெரிந்து வைத்திருந்தால், மிக கடினமாக இருக்கும் வேலைகளை மிகமிக எளிதாக செய்ய முடியும் அல்லது நீங்கள் தேடிச் செல்லும் பொருள் கூட எளிதாக உங்களிடத்தில் வந்து சேரும்.

மாயாஜால வித்தைகள் என ஏமாற்றும் சிலர்கூட இயற்பியலின் விதிகளை தெரிந்து கொண்டு தான் மக்களை வாயடைக்க வைக்கிறார்கள். அப்படியான அறிவியல் விதிகள் மனிதர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று என நாம் எண்ணிக்கொள்ளக்கூடாது.

பள்ளிக்கூடம் சென்று படிக்காத பறவைகளுக்கு கூட அந்த விதி தெரியும். அவற்றிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அந்தவகையில் பிஸிக்ஸ் தெரிந்த குருவி ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகியிருக்கிறது. அதாவது தாகத்துடன் இருக்கும் குருவி, தண்ணீர் தேடி அலைகிறது.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்