-8.6 C
Norway
Friday, December 6, 2024

திருமறைக் கலாமன்றம் நோர்வே விடுக்கும் அறிவித்தல்

வணக்கம் உறவுகளே!

கடந்த 58 ஆண்டுகளுக்கு மேலாக கலையுலகில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்ற யாழ் திருமறைக்கலா மன்றம் தனது கிளைகளை உலக நாடுகள் பலவற்றிலும் பரப்பி உள்ளது. அதன் அடிப்படையில் நோர்வே பேர்கன் நகரிலும் திருமறைக்கலா மன்றத்தின் கிளை ஆரம்பிக்கப்பட்டு சில கலைப்படைப்புக்களை அரங்கேற்றியமை யாவரும் அறிந்ததே.

மீண்டும் திருமறைக்கலா மன்றத்தின் கலைப்பணிகளை நோர்வேயில் முன்னெடுக்க நாம் ஆவல் கொண்டுள்ளோம்.

நமது தமிழ் மரபுக் கலை வடிவத்தினை பேணவும், தாய் மண்ணின் மற்றும் நாம்
வாழும் சமுகத்தின் பண்புகளை இயல், இசை, நாடகம் வழி அரங்கேற்றவும்
அதன் வழியாக இச்சமுகத்துடன் ஒருங்கிணையவும் கலைப்பட்டறையினை
ஆரம்பித்து கலைப்பயணம் தொடரவுள்ளோம்.

சிறுவர்கள், இளையோர், பெரியவர்கள் என அனைவரையும் கலை நிகழ்வுகளில் பங்கு கொள்வதற்கு அழைத்து நிற்கிறோம். திருமறைக்கலா மன்றம் ஒரு மதம் சார்ந்த மன்றமல்ல. நீங்கள் எந்த மதத்தினை சாந்தவராக இருந்தாலும் இணைந்து கொள்ளலாம்.

திருமறைக்கலாமன்றம் நோர்வேயில் முன்னெடுக்கவுள்ள கலை நிகழ்வுகளில் பங்கு கொள்ள விரும்புபவர்களை அழைத்து நிற்கிறோம்.

கலை ஆர்வமுள்ளவர்கள் எம்மோடு தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்கு:
றொபேட் ஜோசப் 92487446 E-mail: rjoale@online.no
யூலியஸ் அன்ரனி 92463674 E-mail: antonipillai@hotmail.com

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்