12.4 C
Norway
Saturday, September 14, 2024

தோண்டும் போது வீட்டுக்குள் கேட்ட சத்தம்…வியந்து போன ஆராச்சியாளர்கள்

பெருவில் 5 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழங்கால கல்லறை ஒரு வீட்டின் கீழ் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பெருதென் அமெரிக்காவில் பசிபிக் பெருங்கடலின் ஓரத்தில் பெரு அமைத்திருக்கிறது.

இந்நாட்டின் தலைநகரமான லிமாவில் வசித்துவரும் ஹிபோலிடோ டிகா என்பவர் தனது வீட்டை பெரிதுபடுத்த நினைத்திருக்கிறார்.

இதனால், உள்ளூர் கட்டுமான நிறுவனத்தை அணுகிய டிகா, தனது வீட்டு வேலைகளை ஆரம்பித்துள்ளார்.

இதனிடையே டிகா ஒருநாள் தனது வீட்டின் தளத்தினை தோண்டியிருக்கிறார் . அப்போது வித்தியாசமாக சத்தம் கேட்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து தளத்தைனை கவனமாக தோண்ட, உள்ளே இருந்ததை பார்த்து பிரம்மித்து போயிருக்கிறார் . காரணம் உள்ளே இருந்தது பழங்கால கல்லறை ஆகும்.

இதனை தொடர்ந்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. உடனே விரைந்துவந்த ஆராய்ச்சியாளர்கள் வீட்டினை பார்வையிட்டுள்ளனர்.

அப்போது உள்ளே கல்லறை இருப்பதை கண்டறிந்த அவர்கள், உடனடியாக அவற்றை ஆய்வு செய்ய களத்தில் இறங்கியுள்ளனர்.

உள்ளே விலைமதிப்பு மிக்க உலோகங்களால் போர்த்தப்பட்ட நிலையில் இருந்த கல்லறைக்குள் எலும்புக்கூடு இருந்திருக்கிறது.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்