9.1 C
Norway
Thursday, October 3, 2024

நாக்கில் வளரும் கருப்பு முடி!

தனது நாக்கில் வளர்ந்த அடர்த்தியான மஞ்சள் படிந்த முடியால் அதிர்ச்சிக்குள்ளான 50வயது மதிக்கதக்க நபரை, தோல் மருத்துவர் குணமாக்கி இருக்கும் விசித்திர சம்பவம் நடந்துள்ளது.

மூன்று மாதத்திற்கு முன்பு இடதுப்புற பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு உள்ளான 50வது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது நாக்கு பகுதியில் மஞ்சள் படிந்த அடர்த்தியான கருப்புநிற முடிகள் வளர்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்த மாற்றத்தை தனது பக்கவாதத்திற்கு பிறகு எடுத்துக்கொண்ட தூய்மையான திரவ உணவு கட்டுப்பாட்டை தொடர்ந்ததில் இருந்தே ஆரம்பமாகியதாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து தெரிவித்த அவரின் தோல் மருத்துவர், Black Hairy Tongue என்றழைக்கப்படும் இந்த பாதிப்பு சாதாரணமான உடல்நல பாதிப்பே என தெரிவித்துள்ளார்.

வாயில் அளவுக்கு அதிகமான பக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் வளர்வதால் ஏற்படுவதே Black Hairy Tongue.

அதாவது நாக்கின் மேற்பரப்பில் காணப்படும், papillaeகளில் இந்த பக்டீரியாக்கள் வளர்ந்து கொண்டே செல்வதாக கருப்பாக அடர்த்தியான முடி போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.

குறித்த நபருக்கு நாக்கு பகுதியை சரியாக சுத்தம் செய்யாமல் இருந்ததால் உணவு படிமங்கள் படிந்தும், தொடர்ந்து திரவ உணவுகளை மட்டும் உட்கொண்டதால் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ருப்பினும் அவரின் எச்சில் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடத்தியதில் எந்தவொரு வழக்கத்துக்கு மாறான பாக்டீரியாக்களோ, பூஞ்சைகளோ இல்லை என தெரியவந்ததை தொடர்ந்து அவருக்கு வழக்கமான வாய் சுகாதார நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு கருப்பு முடி அகற்றப்பட்டுள்ளது.

மேலும் அவருக்கு தொடர்ச்சியான சுத்தம் செய்யும் வழிமுறைகளுக்கான அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளதாக அவரது மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இந்த கருப்பு முடியானது குறுகிய காலமே உயிர்வாழும் தன்மை கொண்டது எனவும் இதனால் எந்தவொரு பாதிப்பும் இருக்காது எனவும் ஆராய்ச்சி கட்டுரைகள் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்