12.4 C
Norway
Saturday, September 14, 2024

பாம்புக்கு கைகளில் தண்ணீர் கொடுத்த நபர்! நெகிழ வைக்கும் வீடியோ காட்சிகள்

உலகில் மக்கள் அதிகம் பயப்படும் விடயங்களாக பாம்புகள் இருந்தாலும், சில நேரங்களில் டிரெண்டாகி வரும் வீடியோக்கள் அதை தவறு என நிரூபிக்கின்றன.

அந்த வகையில் தண்ணீர் தாகத்துடன் இருக்கும் பாம்பு ஒன்றிற்கு, நபர் ஒருவர் தன்னுடைய கைகளில் தண்ணீரை வழங்குகிறார்.

IFS அதிகாரியான Susanta Nanda டுவிட் செய்துள்ள இந்த வீடியோவுக்கு, பலரும் பலவிதமான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

” கோடை காலம் வந்துகொண்டிருக்கிறது, நீங்கள் சிந்தும் ஒரு சில தண்ணீர் துளிகள் உயிரை காப்பாற்றலாம், உங்களது தோட்டத்தில் பாத்திரத்தில் தண்ணீரை வைத்துவிடுங்கள், பல உயிரினங்களுக்கு அது பயன்படும்” என பதிவிட்டு இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அதில், நபர் ஒருவர் தன்னுடைய கைகளில் தண்ணீரை அளிக்க பாம்பு அழகாக அருந்துகிறது.

இந்த வீடியோ பதிவிட்ட சில மணிநேரங்களில் லைக்ஸ்கள் குவிந்து வருவதுடன் டிரெண்டாகி வருகிறது.

“இதைப்போன்று யாரும் முயற்சிக்க வேண்டாம்” என சிலர் பதிவிட, குறித்த நபரின் மனிதாபிமானத்தை போற்றுகின்றனர்.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்