-8.6 C
Norway
Friday, December 6, 2024

பிரான்ஸில் கொரோனா நிலவரம்; 24 மணி நேரத்தில் இவ்வளவு பேரா?

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,42,253 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கொரோனா காட்டுத்தீயாக பரவி வந்த நிலையில் தற்போது தொற்று சற்று குறைவாக பதிவாகி வருகிறது. அதன்படி பிரான்சில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.18 கோடியை கடந்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,42,253 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரான்சில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை தற்போது 2,18,77,555 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 390 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கையும் 1 லட்சத்து 35 ஆயிரத்து 579 ஆக உயர்ந்துள்ளது.

பிரான்சில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 1,75,95,367 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் தற்போது 41,46,609 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்