-6.3 C
Norway
Friday, December 6, 2024

பிளாஸ்டிக் ஜாடிக்குள் தலையை விட்டு சிக்கிக்கொண்டு தவித்த கரடி குட்டி!

அமெரிக்காவில் பிளாஸ்டிக் ஜாடிக்குள் தலையை விட்டு மாட்டிக்கொண்டு தவித்த கரடி குட்டி அதிலிருந்து மீட்கப்பட்டது.

அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில் உள்ள வனவிலங்கு உயிரியலாளர்கள் கரடி குட்டியை மீட்டு காப்பாற்றினர்.

ஒரு கரடி குட்டி அதன் தலையை ஒரு வெளிப்படையான பிளாஸ்டிக் ஜாடிக்குள் விட்டு மாட்டிக்கொண்டது.

வனவிலங்கு பிரிவு விஞ்ஞானிகளுக்கு கடந்த வாரம் கரடி குட்டி பற்றி தகவல் தெரியவந்தது.

உடனே உயிரியலாளர்கள் விரைவாக செயல்பட்டு, ஒரு மரத்தின் மீது அமர்ந்திருந்த கரடி குட்டியைக் கண்டுபிடித்தனர்.

கரடியின் கழுத்தை இறுக்கமாக பொருந்தியிருக்கும் ஜாடி அதன் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடும் என்பதை அறிந்து, கரடிக்குட்டியை விரைவில் விடுவிக்க முயற்சி செய்தனர்.

அதற்கு மயக்க ஊசி செலுத்தபட்டு பிடிக்கப்பட்டது. கரடி மரத்திலிருந்து கீழே கொண்டு வரப்பட்டு, அதன் தலையில் மாட்டியிருந்த பிளாஸ்டிக் ஜாடி வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

அதிர்ஷ்டவசமாக, கரடிக்கு பெரிய காயங்கள் ஏதும் இல்லை. பின்னர் வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்ட கரடிக்குட்டி, அருகில் காத்திருந்த அதன் தாயைக் கண்டுபிடித்து சேர்ந்துகொண்டது.

இச் சம்பவத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கும் வனவிலங்கு உயிரியலாளர்கள் கூறியிருப்பதாவது,

‘பலூன்கள், மீன்பிடி பாதை அல்லது பிளாஸ்டிக் கொள்கலன்கள் என எதுவாக இருந்தாலும், அவற்றை வீசி செல்வதால், வனவிலங்குகள் அவற்றை அடிக்கடி உட்கொள்ளலாம் அல்லது சிக்கிக்கொள்ளலாம்.

குப்பைகள் மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை முறையாகப் பாதுகாப்பதன் மூலம் வனவிலங்குகள் இதுபோன்ற சூழ்நிலைகளில் சிக்காமல் இருக்க அனைவரும் உதவலாம்’ என்று பொதுமக்கள் பொறுப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

கரடிக்குட்டியை காப்பாற்றிய வனவிலங்கு உயிரியலாளர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்