9.1 C
Norway
Thursday, October 3, 2024

பீட்சா மீது காதல் கொண்ட பெண் படைத்த சாதனை!

பீட்சாவை விரும்பிச் சாப்பிடும் அமெரிக்காவை சேர்ந்த டெலினா (Telina Cuppari) என்ற பெண் ஒருவர் ஒன்றிரண்டு பீட்சாவை ஒரே வேளையில் உண்பது மட்டுமல்லாமல் வாழ்நாள் முழுவதும் அனேக சந்தர்பங்களில் அதை உண்பதையே ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளார்.

பீட்ஸா என்று எழுதப்பட்ட போஸ்டர், பீட்ஸா தீம் இடம்பெறும் ஆடைகள், பொருட்கள், விளம்பரம் என எது கண்டாலும் அதை சேகரிக்கத் தொடங்கியுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி நிலவரப்படி பீட்ஸா தொடர்புடைய 669 பொருட்களை சேகரித்து வைத்திருந்தார் இந்தப் பெண். இந்நிலையில், அந்த சேகரிப்புகளை கௌரவிக்கும் விதமாக, கடந்த 24ஆம் திகதி புதன்கிழமை அன்று இதுகுறித்த தகவல் கின்னஸ் சாதனை புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

சாதனை பதிவு

முன்னதாக பிலாதேபியா என்னும் பகுதியைச் சேர்ந்த பிரையன் டையர் என்பவர் கடந்த 2011ஆம் ஆண்டில் பீட்ஸா தொடர்பில் 561 பொருட்களை சேகரித்து கின்னஸ் சாதனையில் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் கெலின்வொர்த் அந்த சாதனையை இப்போது முறியடித்துள்ளார்.

டெலினாவை அவரது நண்பர்கள் ‘பீட்ஸா பெண்’ என்றுதான் அழைப்பார்களாம். முதன் முதலாக சிவப்பு நிற பீட்ஸா டிரெஸ் ஒன்றை இவர் வாங்கியுள்ளார். இது மட்டுமல்லாமல் பீட்ஸா என பிரிண்ட் செய்யப்பட்ட டீ சர்ட், சாக்ஸ் என ஏராளமான கலெக்‌ஷன்களை வைத்துள்ளார்.
இவருக்கு பீட்ஸா மீதான காதல் எந்த அளவுக்கானது என்றால் தான் கர்ப்பமாக இருந்தபோது பீட்ஸா தீம் அடிப்படையில் ஃபோட்டோசூட் நடத்தினார். அவர் தங்கியிருந்த மருத்துவமனை அறை கூட ஃபீட்ஸா போல அலங்கரிக்கப்பட்டிருந்ததாம்.

இந்த சாதனை செய்ததோடு நிற்கப் போவதில்லையாம். தன்னுடைய சாதனையை தானே முறியடிக்க தொடர்ந்து பீட்ஸா பொருட்களை சேகரிக்கப் போவதாக கூறியுள்ளார்.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்