30.1 C
Norway
Tuesday, May 30, 2023

புதிய உலக சாதனை படைத்த மிக நீளமான கண்ணாடி பாலம்!

வியட்நாமில் உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வருகிற 30ஆம் திகதி திறந்து வைக்கப்படுகிறது.

பாக் லாங்(Bach Long) என்று அழைக்கப்படும் இந்த பாலம் 2ஆயிரத்து 73 புள்ளி 5 அடி நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

வியட்நாமில் வருகிற 30ஆம் திகதி கொண்டாடப்பட உள்ள மறு ஒருங்கிணைப்பு தினத்தின் போது இந்த பாலம் திறந்து வைக்கப்பட உள்ளது. உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் என்ற சாதனைக்காக இந்த பாலம் கின்னஸ் அமைப்பிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாஜீவில் ஆயிரத்து 410 புள்ளி 7 அடி நீளமுள்ள கண்ணாடி பாலம் தான் தற்போது உலகின் நீளமான கண்ணாடி பாலம் என்று சாதனை படைத்துள்ளது.

அதனை முறியடித்து புதிய சாதனை படைத்தது வியட்நாமிலுள்ள பாக் லாங்(Bach Long) என்று அழைக்கப்படும் இந்த பாலம்.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்