20.7 C
Norway
Saturday, September 14, 2024

மக்கள் வசிப்பதற்கான உலகளவில் சிறந்த நகரங்கள் பட்டியலில் முதலிடம் எது தெரியுமா?

மக்கள் வசிப்பதற்கு உலகளவில் சிறந்த நகரமாக ஆஸ்திரியா தலைநகர் வியன்னா தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பொருளாதார புலனாய்வு பிரிவு நடத்திய சிறப்பு ஆய்வில் மக்கள் வசிப்பதற்கு சிறந்த நகரங்களாக தேர்வு செய்யப்பட்ட முதல் 10 நகரங்களில் ஐரோப்பாவைச் சேர்ந்த 6 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

ஸ்திரத்தன்மை, சிறந்த உள்கட்டமைப்பு, சுகாதாரம், கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்குக்கான அம்சங்களை கொண்டு இந்த நகரங்கள் பட்டியலிடப்படுகின்றன.

முதல் 10 இடங்களுக்குள் வழக்கமாக இடம்பிடிக்கும் ஆக்லாந்து கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக இந்த பட்டியலில் 34-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

கோப்பன்ஹேகன், ஸூரிக், ஜெனீவா , ஃபிராங்க்ஃபர்ட் , ஆம்ஸ்டர்டாம் ஆகிய ஐரோப்பிய நகரங்கள் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளது.

இந்த பட்டியலில் லண்டன் 33-வது இடத்திலும் ஸ்பெயினின் பார்சிலோனா மற்றும் மாட்ரிட் முறையே 35 மற்றும் 43 வது இடத்தைப் பிடித்துள்ளன.

இத்தாலியின் மிலன் 49வது இடத்திலும், அமெரிக்காவின் நியூயார்க் நகரம் 51வது இடத்திலும், சீனாவின் பெய்ஜிங் 71வது இடத்திலும் உள்ளன.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்