12.4 C
Norway
Saturday, September 14, 2024

மரடோனாவின் ரீ-சர்ட் இவ்வளவு தொகைக்கும் ஏலம் விடப்பட்டதா?

உலகின் புகழ்பூத்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான மறைந்த டியாகோ மரடனோவின் ரீ-சர்ட் ஒன்று பெருந்தொகை பணத்திற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

1986ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அணிந்த ரீ-சர்ட் இவ்வாறு பெருந்தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இணைய வழியில் ஏலத்தில் விடப்பட்ட மரடோனாவின் ரீ-சர்ட் 9.3 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அனாமேதய கொள்வாளர் ஒருவர் இந்த ரீ-சர்ட்டை 9284536 டொலர்களைக் கொடுத்து கொள்வனவு செய்துள்ளதாக ஏல விற்பனை நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகக் கிண்ண காலிறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீனா அணி 2க்கு 1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றியீட்டியது.

இந்தப் போட்டியின் நிறைவில் இங்கிலாந்து அணியின் வீரர் ஸ்டீவ் ஹொட்ஜ் மற்றும் மரடோனா ஆகியோர் தங்களது ரீ-சர்ட்களை பரிமாறிக் கொண்டிருந்தனர்.

போட்டியின் போது இங்கிலாந்து வீர்ர் ஹொட்ஜ் எதேற்சையாக மரடோனாவிற்கு வழங்கிய பாஸ் மூலம் கோல் ஒன்று போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த கோல் ஹான்ட் ஒப் கோட் (‘Hand of God’ ) என கால்பந்தாட்ட விமர்சகர்களினால் புகழ்ந்து பாராட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக போட்டியொன்றில் பயன்படுத்திய ரீ-சர்ட் ஒன்று கடந்த 2019ம் ஆண்டில் 5.64 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்