-8.6 C
Norway
Friday, December 6, 2024

மறைந்திருந்த சிறுத்தை! நொடிப்பொழுதில் உயிரைவிட்ட முதலை

பொதுவாக காட்டு மிருகங்களின் வேட்டை என்பது காண்பவர்களுக்கு கடுமையான மிரட்சியாகவே இருக்கும்.

இங்கு காணொளியில் மறைந்திருக்கும் ஜாக்குவார், வேட்டைக்காக காத்திருக்கிறது. அப்போது தண்ணீருக்குள் இருக்கும் முதலை கரையை நோக்கி வருகிறது. உன்னிப்பாக கவனிக்கும் ஜாக்குவார், சரியான நேரத்தை எதிர்நோக்குகிறது.

அருகில் வேட்டை முதலை வந்தவுடன் சற்றும் தாமதிக்காமல் நீருக்குள் தாவிக்குதித்து, முதலையை வாயில் கவ்வி மேலே இழுத்து வருகிறது. ஜாக்குவாரிடம் இருந்து தப்பிக்க எவ்வளோ முயற்சி செய்தும், முதலையால் முடியவில்லை.

பார்க்கும்போதே உடலை சிலிர்க்க வைக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. முதலை மற்ற விலங்குகளை வேட்டையாடி பார்த்திருக்கிறோம்.

ஆனால் முதலையையே ஜாக்குவார் வேட்டையாடுவதை முதன்முறையாக இந்த வீடியோவில் பார்த்து வியப்படைந்துள்ளனர். இந்த வீடியோ டிவிட்டரில் மட்டும் சுமார் 1.4 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

 

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்