20.7 C
Norway
Saturday, September 14, 2024

முதன்முறையாக ஆஸ்கார் விருது வென்ற நாயகன் வில் ஸ்மித்! சிறந்த நடிகைக்கான விருதை தனதாக்கிய ஜெசிகா சாஸ்

இந்த ஆண்டிற்கான 94 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாக கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94 வது ஆஸ்கர் விருது விழா நடைபெற்றது. இதில்கிங் ரிச்சர்ட் திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர் வென்றுள்ளார்.

அதேசமயம் சிறந்த நடிகைக்கான விருது ஜெசிகா சாஸ்டைனுக்கு வழங்கப்பட்டுள்ளது. The Eyes of Tammy Faye திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருது கிடைத்துள்ளது.

தி பவர் ஆஃப் தி டாக் திரைப்படத்தை இயக்கியதற்காக ஜேன் கேம்பியன் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் விருதை அவர் வென்றார்.

அதேசமயம் கோடா சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றுள்ளது. மேலும் சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை ஜென்னி பீவன் வென்றுள்ளார்.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்