9.1 C
Norway
Thursday, October 3, 2024

முதல் நாளே வசூலை அள்ளிய சீதா ராமம்.. கோடிகளை குவித்த துல்கர் சல்மானின் படம்

துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர், பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் சீதா ராமம். ஹனு ராகவப்புடி இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தியா, பாகிஸ்தான் பிரச்சனையை மையமாகக் கொண்ட இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. தேசப்பற்று, காதல் என இரண்டையும் அற்புதமாக சொல்லி உள்ளார் இயக்குனர்.தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் துல்கர் சல்மானுக்கு தமிழ் ரசிகர்களும் அதிகம். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்சினிமாவில் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியானது. அதில் அதர்வாவின் குருதி ஆட்டம் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது.

மேலும் வைபவ் நடிப்பில் காட்டேரி, பிரபுதேவாவின் பொய்க்கால் குதிரை போன்ற படங்களும் வெளியாகி இருந்தது. இவை அனைத்தையும் தாண்டி துல்கர் சல்மானின் சீதாராமம் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் முதல் நாளே கிட்டத்தட்ட 5 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது.

இந்நிலையில் குருதி ஆட்டம் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனால் பெரும்பாலான ரசிகர்கள் சீதாராமம் படத்தை பார்க்க விரும்புகின்றனர். இந்நிலையில் நேற்றுடன் படம் வெளியாகி இரண்டு நாட்கள் ஆன நிலையில் கிட்டதட்ட 10 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இரண்டாவது நாளே படத்தின் வசூல் இரண்டு மடங்கு வசூல் அதிகரித்துள்ளது.

மேலும் தொடர்ந்து சீதாராமம் படத்திற்கு பாஸிட்டிவ் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் இன்னும் சில தினங்களில் படத்தின் வசூல் பலமடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. துல்கர் சல்மானுக்கு சீதாராமம் படம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்