0.2 C
Norway
Monday, November 10, 2025

ராட்சத மணல்புயல் தாக்கியத்தில் சுமார் 9 ஆயிரம் வீடுகளுக்கு நேர்ந்த சோகம்

வடக்கு சிலியில் உள்ள டியகோ டி அல்மாக்ரோ நகரத்தை ராட்சத மணல்புயல் தாக்கிய காட்சிகள் வெளியாகி உள்ளன.

மணல் புயல் வீசியதன் விளைவாக சுமார் 9 ஆயிரம் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

அட்டகாமா பாலைவனத்தை ஒட்டி அமைந்துள்ள இந்த நகரத்தை நோக்கி ராட்சத புழுதி நகர்ந்து வரும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி உள்ளன.

இந்நிலையில் ஏற்கனவே இடி மின்னலுடன் கூடிய கன மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், மணல் புயல் வீசக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்ததால் நகரத்தில் போதுமான முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்