9.1 C
Norway
Thursday, October 3, 2024

லம்போர்கினியை விடவும் அதிக தொகைக்கு விற்கப்பட்ட ஒற்றை ஆடு: மலைக்க வைக்கும் விலை

ஸ்கொட்லாந்தில் முன்னெடுக்கப்பட்ட ஏலத்தில் ஆடு ஒன்று சுமார் 168,000 பவுண்டுகளுக்கு விற்கப்பட்டுள்ளது. இது லம்போர்கினி ஹூரகான் காரை விடவும் அதிக தொகை என தெரியவந்துள்ளது.

முதல் நாள் நடந்த ஏலத்தில் மொத்தம் விற்கப்பட்ட மூன்று ஆடுகளில் ஒன்று Texel இனத்தை சேர்ந்த ஆண் ஆடு எனவும், இந்த ஆடு இறுதியாக 100,000 கினியாக்களுக்கு விற்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கினியாக்கள் என்பது கால்நடைகளை வாங்குவதற்கான பாரம்பரிய நாணயமாகும். Rhaeadr First Choice என பெயரிடப்பட்டுள்ள அந்த Texel இனத்தை சேர்ந்த ஆண் ஆடு ஒன்று சுமார் 168,000 பவுண்டுகளுக்கு விற்கப்பட்டுள்ளது.

மேலும், Aberdeenshire, Cheshire மற்றும் Oxfordshire ஆகிய பகுதிகளை சேர்ந்த மூன்று வளர்ப்பாளர்கள் இணைந்து குறித்த தொகைக்கு அந்த ஆட்டினை வாங்கியுள்ளனர்.

மூன்றில் எஞ்சிய இரு ஆடுகளும் முறையே 130,000 மற்றும் 100,000 கினியாக்களுக்கு விற்பனையாகியுள்ளது. டெக்சல் செம்மறி ஆடுகள் நெதர்லாந்தின் கடற்கரையில் உள்ள ஒரு சிறிய தீவை பூர்வீகமாகக் கொண்டவை.

மட்டுமின்றி டெக்சல் செம்மறி ஆடுகள் வழக்கமாக ஐந்து இலக்கத் தொகைகளுக்கு விற்கப்படுகின்றன. 2020ல் முன்னெடுக்கப்பட்ட ஒரு ஏலத்தில் டெக்சல் செம்மறி ஆடு ஒன்று 368,000 பவுண்டுகலுக்கு விற்கப்பட்டுள்ளதே சாதனையான இருந்து வருகிறது.
கிறிஸ் பிரவுன், கன்யே வெஸ்ட் மற்றும் ஜஸ்டின் பீபர் உட்பட பிரபலங்கள் பயன்படுத்தும் லம்போர்கினி ஹூரகான் காரின் துவக்க விலையே 155,400 பவுண்டுகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்