9.1 C
Norway
Thursday, October 3, 2024

விக்ரம் வெற்றியின் மூலம் அடுத்து.. வேட்டையாட காத்திருக்கும் கமல்.!

16 வருடங்கள் கழித்து இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனுடன் கமலஹாசன் கைக்கோர்க்க உள்ள தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. சமீபத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் பிரம்மாண்டமான வரவேற்பை பெற்று வருகிறது.

இதனிடையே கமலஹாசனின் வீடு மற்றும் அலுவலகத்தில் பல திரைப்பிரபலங்கள் கமலஹாசனை சந்தித்து வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் .தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன், கமலஹாசனை சந்தித்து விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது கூடிய விரைவில் வேட்டையாடு விளையாடு 2 திரைப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்கலாமா என கேட்டுள்ளார்

இதற்கு கமலஹாசனும் சரி என்று சொன்ன நிலையில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இத்திரைப்படத்தின் கதையை எழுத ஆயத்தமாகி வருகிறார். 2006 ஆம் ஆண்டு உலக நாயகன் கமலஹாசன் ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஸ்ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான வேட்டையாடு விளையாடு திரைப்படம் பிரம்மாண்டமான ஹிட் கொடுத்தது.

ஏற்கனவே தேவர்மகன்-2 படத்தை இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்திலும், ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடிப்பதற்காக கமலஹாசன் ஆயத்தமாகி வருகிறார். தற்போது இந்த வரிசையில் வேட்டையாடு விளையாடு 2 திரைப்படமும் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

விக்ரம் திரைப்படம் வெளியாகி தற்போது வரை 300 கோடிக்கு மேல் வசூல் சாதனைப் படைத்து வரும் நிலையில், கூடிய விரைவில் 500 கோடியை எட்டும் என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது. பல மாதங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் தோல்வி அடைந்த நிலையில், விக்ரம் திரைப்படம் அனைத்து ரசிகர்களையும் குஷிப்படுத்தியுள்ளது.

தற்போது தேவர் மகன் 2, இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததற்கு பின் வேட்டையாடு விளையாடு 2 திரைப்படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் கமல்ஹாசனின் மார்க்கெட் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியால் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்