-6.3 C
Norway
Friday, December 6, 2024

விமானத்தில் செல்பி கேட்ட ரசிகர்.. ஒரே குத்து விட்ட மைக் டைசன்! வைரல் வீடியோ

பிரபல அமெரிக்க குத்துசண்டை வீரர் மைக் டைசன் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அவர் தற்போது விஜய் தேவரக்கொண்டா நடிக்கும் லைகர் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்து இருக்கிறார். இந்த தெலுங்கு படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்நிலையில் தற்போது மைக் டைசன் மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அவர் விமானத்தில் சென்று கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் பின் சீட்டில் அமர்ந்துகொண்டு தொடர்ந்து நச்சரித்து இருக்கிறார்.

அந்த நபர் செல்பி கேட்டு தொல்லை செய்ததாக தெரிகிறது. அதனால் கடுப்பான மைக் டைசன் அவருக்கு ஒரு குத்து விட்டிருக்கிறார். அதற்கு பிறகு தான் அந்த நபர் அமைதியாக அமர்ந்து இருக்கிறார். அது தற்போது வீடியோவாக வெளிவந்து வைரல் ஆகி இருக்கிறார்.

அருகில் இருக்கும் சீட்டில் இருந்த நண்பர் தான் அந்த வீடியோவை பதிவு செய்திருக்கிறார்.

 

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்