12.4 C
Norway
Saturday, September 14, 2024

வெள்ளி கிரகத்தை புதிதாக படம் பிடித்த ‘நாசா’’வின் விண்கலம்!

நாசா’ எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனத்தின், ‘பார்க்கர்’ விண்கலம், வெள்ளி கிரகத்தின் மேற்பரப்பை மிக தெளிவாக படம் பிடித்து அனுப்பி உள்ளது.

சூரியனின் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக, ‘பார்க்கர்’ விண்கலத்தை, நாசா 2018ல் விண்ணில் ஏவியது.

இது 2025ல் சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு மேற்கொள்ளும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சூரியனுக்கு மிக அருகே வெள்ளி கிரகம் உள்ளது.

இந்நிலையில், சூரியனை நெருங்கிக் கொண்டிருக்கும் பார்க்கர்விண்கலம் வெள்ளி கிரகத்தை கடக்கையில், அதன் மேற்புறத்தை ஏற்கனவே மூன்று முறை புகைப்படம் எடுத்து உள்ளது. ஆனால், வெள்ளி கிரகத்தின் மேற்புறத்தில் உள்ள மேக கூட்டங்களால், அதன் மேற்புற காட்சிகள் சரிவர பதிவாகாமல் இருந்தன.

சமீபத்தில் நான்காவது முறையாக வெள்ளி கிரகத்தை பார்க்கர் விண்கலம் கடந்தது. அப்போது, அதன் மேற்புறம் மிக தெளிவாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது வெள்ளி கிரகம் குறித்த ஆய்வில் மிகப்பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. ‘இதன் வாயிலாக, வெள்ளி கிரகத்தின் தட்ப வெப்பம், அங்கு உள்ள வளங்கள் குறித்து மேலும் துல்லியமாக ஆய்வு செய்ய, இந்த புகைப்படம் பேருதவியாக இருக்கும்’ என, ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்