17.5 C
Norway
Tuesday, April 23, 2024

கனடாவில் பல நூறு வருடங்களுக்கு முன்னர் பயன்படுத்திய நாணயக்குற்றி

கனடாவின் மிகப் பழமையான நாணயக் குற்றி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நியூபவுன்ட்லாண்டில் வரலாற்று ஆய்வாளர் ஒருவரினால் இந்த நாணயக்குற்றி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நாணயக் குற்றி சுமார் 600 ஆண்டுகள் பழமையானது என தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் பயன்படுத்தப்பட்ட மிகப் பழமையான ஆங்கில நாணயக்குற்றி இதுவென ஊகிப்பதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நியூபவுன்ட்லாண்ட்டின் தென் கரையோரப் பகுதியில் இந்த அரிய நாணயம் கிடைக்கப் பெற்றுள்ளது.

எந்த இடத்தில் நாணயம் கண்டு எடுக்கப்பட்டது என்பது பற்றிய துல்லியமான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

ஏனெனில் அவ்வறான தகவல்க்கள் வெளியிடப்பட்டால் பழமையான பொருட்களை தேடுபவர்கள் அந்தப் பகுதியில் குழுமக் கூடும் என்ற காரணத்தினால் தகவல்கள் வெளியிடப்படவில்லை.

1422 முதல் 1427ம் ஆண்டுக்குள் இந்த நாணயக் குற்றி புழக்கத்தில் விடப்பட்டிருக்கும் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் ஆறாம் ஹென்றி மன்னரின் ஆட்சிக் காலத்தில் இந்த நாணயக் குற்றி பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நாணயம் முழுமையாக தங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது எனவும், இதன் தற்போதைய பெறுமதி பற்றிய விபரங்களை வெளியிட முடியாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்