-5.1 C
Norway
Thursday, March 28, 2024

நூலிழையில் ஆஸ்கர் விருதை இழந்த கமலின் 5 படங்கள்

உலகநாயகன் கமலஹாசன் தன் படங்கள் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர். இவர் தேசிய விருது முதல் பல விருதுகளை பெற்றுள்ளார். கமலஹாசனின் ஏழு படங்கள் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது. அதில் ஹிந்தியில் சாகர், தெலுங்கில் ஸ்வாதி முத்யம் மற்றும் தமிழ் மொழியில் 5 படங்களும் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது.

நாயகன்: மணிரத்தினம் இயக்கத்தில் 1987 வெளியான திரைப்படம் நாயகன். இப்படத்தில் கமலஹாசன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் 1988 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதிற்கு அனுப்பப்பட்டது. அதுமட்டுமல்லாமல் நாயகன் படம் 3 தேசிய விருதுகளை பெற்றது.

தேவர் மகன்: பரதன் இயக்கத்தில் கமல் எழுதி, தயாரித்து 1992 ல் வெளியான திரைப்படம் தேவர் மகன். இப்படத்தில் கமல்ஹாசன், சிவாஜி கணேசன், ரேவதி, கௌதமி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் பல பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை வென்றது. தேவர்மகன் படம் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

குருதிப்புனல்: பிசி ஸ்ரீராம் இயக்கத்தில் கமலஹாசன் எழுதி, தயாரித்து, நடித்த 1995 இல் வெளியான திரைப்படம் குருதிப்புனல். இப்படத்தில் கமலை தொடர்ந்து அர்ஜுன், நாசர், கௌதமி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதை கமலஹாசன் பெற்றார். பாடல்களை இல்லாமல் வெளிவந்த குருதிப்புனல் திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இந்தியன்: ஷங்கர் இயக்கத்தில் 1996 இல் வெளியான திரைப்படம் இந்தியன். இப்படத்தில் கமலஹாசன், சுகன்யா, மனிஷா கொய்ராலா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் சேனாதிபதியாகவும், சந்துருவாகவும் கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் பல பிரிவுகளில் மூன்று தேசிய விருதுகளை பெற்றது. சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான நுழைவாக இந்தியன் திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

அடுத்து வர உள்ள இந்தியன்-2 படத்திலாவது ஆஸ்கர் வாங்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் கமல் மற்றும் ஷங்கர் தங்களது முழு உழைப்பை செலுத்த உள்ளனர், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹே ராம்: ஹேராம் படத்தில் கமலஹாசன் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தை கமல்ஹாசன், எழுதி, இயக்கி தயாரித்து இருந்தார். இப்படத்தின் கமலஹாசன், ஷாருக்கான், ராணி முகர்ஜி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் 3 தேசிய விருதுகளை வென்றது. ஹே ராம் படமும் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்