19.2 C
Norway
Monday, June 2, 2025

ஸ்பென்சர் அவர்களின் நினவு கூறும் நிகழ்வு

அன்புடையீர்,

எங்களின் அப்பா, சகோதரன் மற்றும் மைத்துனராகிய யோசப் ஸ்பென்சர்  பிரான்சிஸ் சேவியரின் மறைவினால் துயருற்றிருந்த எமக்கு உறுதுணையாகம், ஆறுதலாகவும் இருந்த உங்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இறுதிச்சடங்குகளில் பங்கு கொள்ள முடியாத நிலையிலும் தொலைவிலிருந்து எம்மை ஆற்றுப்படுத்திய அனைத்து அன்புள்ளங்களையும், ஸ்பென்சரை நினைவு கூரும்  நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

இந்நிகழ்வில் உணவு உபசரிப்பு இடம்பெறும். சிற்றுண்டிகள் தயாரித்து தங்களுடைய பங்களிப்பை நல்க விரும்பும் அன்புள்ளங்களை எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

காலம்: வியாழக்கிழமை 29.05.2025
நேரம்: 15.30 மணி
இடம்: Aurdalslia skole

இந் நிகழ்வில் தாங்களும் கலந்து கொண்டு தமது அஞ்சலிகளைச் செலுத்துமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

அன்புடன்
ஸ்பென்செர் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
றுபீனா பிரான்சிஸ் சேவியர்  (ராஜி) 95072623
கிறேத்த பிரான்சிஸ் சேவியர் (கீர்த்தி) 41446842

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்