22.7 C
Norway
Friday, May 3, 2024

20/04/204 சனிக்கிழமையன்று சிறப்பாக நடைபெற்று முடிந்த மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள்

20/04/2024 சனிக்கிழமை அன்று மாவீரர் வெற்றிக்கிண்ண  உதைபந்தாட்டப் போட்டிகள் பேர்கனில் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தன.

தேசியக் கொடி ஏற்றலுடன் குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு (10.00 மணிக்கு )போட்டிகள் ஆரம்பமாகின.

இம்முறை பேர்கனில் இருந்து ஏழு கழகங்கள் மிகவும் ஆர்வத்தோடு கலந்து கொண்டன.

முதல் சுற்றுப்போட்டிகள் Leauge அடிப்படையில் நடைபெற்று,  முதல் நான்கு இடங்களைப்பெற்றுக்கொண்ட  அணிகள் (Tiki Taka Rumba, Tiki Taka Zumba, Atletico Bergen Black, Atletico Bergen White) அரையிறுதி ஆட்டத்திற்கு தெரிவாகின.

அரையிறுதி ஆட்டத்தில் Tiki Taka Rumba அணியினரை எதிர்த்து Atletico Bergen White அணியினரும், Tiki Taka Zumba அணியினரை எதிர்த்து Atletico Bergen Black அணியினரும் விளையாடி, இறுதி ஆட்டத்திற்கு Tiki Taka Rumba அணியினரும் Atletico Bergen Black அணியினரும் தெரிவாகினர்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தின் முடிவில், Atletico Bergen Black அணியினர்  2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர். இரண்டாவது இடத்தை Tiki Taka Rumba அணியினரும். மூன்றாவது இடத்தை Atletico Bergen White அணியினரும் பெற்றுக்கொண்டனர்.

சிறந்த விளையாட்டு வீரராக Atletico Bergen Black அணியைச் சேர்ந்த அருண் அமிர்தலிங்கம் அவர்களும்,
சிறந்த கோல் காப்பாளராக Atletico Bergen Black அணியைச் சேர்ந்த ஜெரமி செல்வராஜா அவர்களும்,
ஒழுக்கமான விளையாட்டு வீரராக  Tiki Taka Rumba அணியைச் சேர்ந்த விதுரன் நரேஷ்குமார் அவர்களும்,

அதிக கோல்களைப் போட்ட வீரராக Tiki Taka Rumba அணியைச் சேர்ந்த சாரங்கன் சிவகணேசன் அவர்களும். Atletico Bergen Black அணியைச்சேர்ந்த ஜெரோன் ராபர்ட் அவர்களும்,

சிறப்புப் பரிசு Bergen Vest அணியைச்சேர்ந்த சுரேன் ஜெராட் அவர்களும் பெற்றுக்கொண்டனர்.

இவ்வருடத்தின் சிறப்பு அம்சமாக முதலாவது இடத்தை பெற்றுக்கொண்ட அணியினருக்கு வழங்கப்பட்ட வெற்றிக்கிண்ணத்தை பேர்கன் கரிகாலன் பேரவை அமைப்பினரும்,

ஏனைய விசேட பரிசில்களை  மாவீரர்களின்  பெயர்களில் மாவீரர்களின்  குடும்பங்களும் , தனி நபர்களும் அன்பளிப்பு செய்திருந்தது  குறிப்பிடத்தக்கது.

இத்துடன் சிறுவர்களுக்கான போட்டியில். பல சிறுவர்கள் ஆர்வத்தோடு பங்கு  பற்றி அவர்களின் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி இருந்தார்கள்..

பேர்கனைச் சேர்ந்த பல குடும்பங்களின் உணர்வுபூர்வமான ஒத்துழைப்போடும் பலரின் கடுமையான உழைப்பாலும் சிற்றுண்டிச்சாலையில் மிகவும் சுவையான உணவுகள் விற்பனை செய்யப்பட்டதும், இதில் கிடைக்கப்பெற்ற லாபங்கள் தாயகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் மாவீரர் குடும்பங்களுக்கு அனுப்பி வைக்க உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயம்.

இவ்வருடத்திற்கான மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி அனைவரது ஒத்துழைப்போடும் இனிதே நிறைவு பெற்றன.

போட்டிகளில் பங்குபற்றிய கழகங்களுக்கும், வெற்றி பெற்ற கழகங்களுக்கும் , அனைத்து வீரர்களுக்கும்  எமது வாழ்த்துக்கள்.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்