11.4 C
Norway
Saturday, May 11, 2024

22 ஆண்டுகள் காரிலேயே உலகை சுற்றிய தம்பதி!

அர்ஜென்டினாவில் கடந்த 2000 -வது ஆண்டில் உலகை சுற்றி வருவதற்காக தொடங்கிய பயணத்தை 22 ஆண்டுகளுக்கு பிறகு முடித்துக்கொண்டு தாய்நாடு திரும்பிய ஒரு தம்பதிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஹெர்மன் மற்றும் கேன்டெலாரியா தம்பதி 2000 -வது ஆண்டு ஜனவரி 25-ல் அர்ஜென்டினா தலைநகர் பியூனோஸ் அயர்ஸ்-ல் இருந்து உலகைச் சுற்றிவரும் பயணத்தை தொடங்கினர்.

இதன்போது 102 நாடுகளில் பயணம் செய்த அவர்கள் சுமார் 3 லட்சத்து 62 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

பயணத்தின் ஆரம்பத்தில் அலாஸ்காவுக்கு சென்ற அந்த தம்பதி,அங்கு 1928-ஆம் ஆண்டு மாடல் கிரஹாம் பெய்ஜ் (Graham-Paige) எனும் காரை வாங்கி அங்கிருந்து காரிலேயே பயணம் செய்தனர்.

இந்த நிலையில், உலக பயணத்தின் போதே 4 குழந்தைகளை அந்த தம்பதி பெற்றெடுத்துள்ளனர். பயணம் சென்ற நாடுகளில் பெரும்பாலும் வீடுகளில் விருந்தாளிகளாக தங்கியுள்ளனர்.

மேலும் இணையவழி மூலம் அவர்களது பிள்ளைகள் கல்வி கற்றதாகவும், பயண அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டுள்ளதாகவும் அந்த தம்பதி தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்