-8.6 C
Norway
Friday, December 6, 2024

27 வருடங்களாக ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத நபருக்கு கிடைத்த சர்ப்ரைஸ்!

பர்கர் கிங் என்ற நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் 27 வருடங்களாக ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் இருந்தார் என்பதற்காக நெட்டிசன்கள் கொடுத்த சர்ப்ரைஸ் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

பர்கர் கிங் என்ற நிறுவனத்தின் ஊழியர் கெவின் ஃபோர்டு(Kevin Ford) என்பவர், தான் பணி செய்த 27 வருடங்களில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் 27 வருடங்களில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத அவருக்கு அவர் வேலை பார்த்த நிறுவனம் ஒரு சின்ன பரிசை மட்டும் வழங்கியது. இதனால் அவர் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். இந்த நிலையில் கெவின் ஃபோர்டு(Kevin Ford) மகள் செரினா என்பவர் தனது தந்தைக்காக ஏதாவது செய்ய முடிவு செய்தார்.

இதனை அடுத்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் 27 வருடமாக ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத தனது தந்தையான பர்கர் கிங் ஊழியர் கெவின் ஃபோர்டு(Kevin Ford) அவர்களுக்கு நிதி திரட்ட முடிவு செய்தார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியிட்டதை பார்த்து நெட்டிசன்கள் பலர் போட்டி போட்டுக் கொண்டு கெவின் ஃபோர்டுக்கு(Kevin Ford) பணத்தை அள்ளி வழங்கினர். GoFundMe என்ற அமைப்பின் மூலம் கெவின் ஃபோர்டு மகள் செரினா இந்த தொகையை திரட்டினார்.

இதன்போது பிரபல நகைச்சுவை நடிகர் டேவிட் ஸ்பேட் (David Spade)என்பவர் முதல் நபராக தனது பங்காக ரூபாய் 5000 டாலர் கொடுத்ததாக தெரிகிறது.

அதன்பின் கெவின் ஃபோர்டு(Kevin Ford) சேவையை பாராட்டி நெட்டிசன்கள் தாராளமாக நிதி வழங்கியதால், ஒரு சில நாட்களில் ஒரு கோடி ரூபாய் சேர்ந்துவிட்டதை அறிந்த கெவின் ஃபோர்டு(Kevin Ford) மகள் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டார்.

தனக்கும் தனது உடன்பிறப்புகளுக்கு கடந்த 27 வருடங்களாக உழைத்த தனது தந்தைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிதி திரட்ட ஏற்பாடு செய்ததாக கெவின் போடு(Kevin Ford) மகள் செரீனா GoFundMe பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

27 வருடங்களில் அவர் ஒரு நாள் கூட தனது வேலையை தவறவிட்டதில்லை என்றும் 27 ஆண்டுகளாக அவர் என்னையும் எனது மூத்த சகோதரியையும் அன்பாக காப்பாற்றினார் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அவருடைய 27 வருட முழுமையான வருகைக்காக அவரது நிறுவனம் ஒரு சிறிய பரிசு மட்டுமே கொடுத்த நிலையில் நெட்டிசன்கள் அவரது தன்னலமற்ற சேவையை பாராட்டி ஒரு கோடிக்கும் மேல் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்