20.7 C
Norway
Saturday, September 14, 2024

60 லட்சம் வீடு.. சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 டைட்டில் வின்னர் யார் தெரியுமா?

விஜய் டிவியில் வெற்றிகரமாக பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் சீனியர் மற்றும் ஜூனியர் என இரு பிரிவுகளாக ஒவ்வொரு வருடமும் நடந்து வருகிறது. தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 ஒளிபரப்பாகி வந்தது.

இந்நிகழ்ச்சியில் பல குழந்தைகள் பங்கேற்று இருந்தனர். மேலும் மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர் இந்நிலையில் நேற்று பிரம்மாண்டமாக சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 இறுதிச்சுற்று நடைபெற்றது. ஒவ்வொரு சீசன் ஃபைனலிலும் இசைத்துறையை சார்ந்த ஜாம்பவான்கள் சிறப்பு விருந்தினராக பங்கு பெறுவார்கள்.

அந்தவகையில் இந்த வருடம் யுவன் சங்கர் ராஜா இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்றார். சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 நிகழ்ச்சியில் மூன்றாவது இடத்தை நேஹா பெற்றார். இவருக்கு 3 லட்சம் பணம் மற்றும் 5 சவரன் தங்க காயின் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் இரண்டாவது இடத்தை ரிஹானா பெற்றார். ஆனால் மக்கள் அளித்த வாக்குகளின்படி இவர்தான் முதலிடத்தில் இருந்தார். மேலும் இவருக்கு 5 லட்சம் பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆக கிரிஷாங் வெற்றி பெற்றார்.

இவருக்கு 60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக கொடுக்கப்பட்டது. மேலும் இந்த விருதினை யுவன் கைகளால் கிரிஷாக் பெற்றார். மேலும் மேடையில் பேசிய யுவன் சங்கர் ராஜா தனது இசையில் கிரிஷாங் பாட வாய்ப்பு கொடுத்துள்ளார். இதனால் கிரிஷாங் இரட்டை சந்தோஷத்தில் உள்ளார்.

மேலும் விஜய் டிவி இதுபோன்ற நல்ல திறமையான பாடகர்களை தமிழ் சினிமாவுக்கு கொண்டு சேர்க்கிறது. மேலும் தற்போது சினிமாவில் உள்ள பல பின்னணி பாடகர் மற்றும் பாடகிகள் சூப்பர் சிங்கரில் இருந்து சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையை தற்போது கிரிஷாக் இடம் பெற உள்ளார்.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்