-2.2 C
Norway
Wednesday, April 30, 2025

குளிர்கால ஒலிம்பிக் தொடர்: முதலிடம் வகிக்கும் நார்வே!

ஒலிம்பிக் போட்டி போன்று குளிர்கால ஒலிம்பிக் போட்டியும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. உறைபனியில் நடத்தக்கூடிய விளையாட்டுகள் மட்டும் இதில் இடம் பெறும்.

இதன்படி 24-வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு சீன தலைநகர் பீஜிங்கில் கடந்த 4-ஆம் திகதி தொடங்கி இன்றுடன் 24-ஆம் திகதி நிறைவடைகிறது.

சீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், அமெரிக்கா, நார்வே, பிரித்தானியா, ஜெர்மனி, ஜப்பான், இந்தியா உள்பட 91 நாடுகளைச் சேர்ந்த 2,871 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்த நிலையில், நார்வே 16 தங்கம் உள்பட 37 பதக்கங்களுடன் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது.

ஜெர்மனி 12 தங்கம் உள்பட ( 27) பதக்கங்களுடன் 2-வது இடத்தில் உள்ளது. சீனா 9 தங்கம் உள்பட (15) பதக்கங்களுடன் 3-வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா 8 தங்கம் உள்பட (25 ) பதக்கங்களுடன் 4-வது இடத்தில் உள்ளது

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்