9.1 C
Norway
Thursday, October 3, 2024

உலகப் புகழ் பெற்ற நயாகரா அருவி மூவர்ணத்தில் ஒளிர்ந்த இந்திய தேசிய கொடி!

உலகப் புகழ் பெற்ற நயாகரா அருவியில் இந்திய தேசிய கொடியின் மூவர்ணத்தில் ஒளிர்ந்ததுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அரச பயணமாக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

இதையடுத்து வெள்ளை மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், Joe Biden முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அரசு விருந்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

இதனைடையே பிரதமர் மோடியின் அமெரிக்க வருகையை முன்னிட்டு அவரை வரவேற்கும் விதமாக பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

அந்த வகையில் மேன்ஹாட்டனில் உள்ள உலக வர்த்தக மைய கட்டிடம், நியூயார்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடம் ஆகியவற்றில் மூவர்ண ஒளி படரும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து உலகப் புகழ் பெற்ற நயாகரா அருவி இந்திய தேசிய கொடியின் மூவர்ணத்தில் ஒளிர்ந்தது.

 

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்