9.5 C
Norway
Saturday, April 27, 2024

இராவணன் பெரு விழா 07.04.2024

ஆதித்தமிழன், ஈடு இணையில்லா தமிழ் அரசன் இராவணன் பெரு விழா வருகின்ற ஏப்ரல் 7 ஆம் நாள் எமது கரிகாலன் தமிழ்ப் பேரவை, சார்பாக எம்மண்ணின் ஆகச்சிறந்த அரசன் இராவணனுக்கு விழா எடுத்து சிறப்பிக்க உள்ளோம்.

திகதி: 07.04.2024
நேரம்: 14.00
இடம்: Ytrebygda kultursenter Sandslivegen 98, 5254 Sandsli

எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர் என பன்முகத்தன்மை கொண்ட சிறப்பு விருந்தினர் திரு மன்னர் மன்னன் அவர்களும், சமூக ஆர்வலர், எழுத்தாளர் திரு இங்கர்சால் அவர்களும் பங்கேற்கிறார்கள்.

இவர்களுடன் எமது பெர்கென் மாணவர்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சிறப்பிக்கிக்க உள்ளனர்.

இவ்விழாவின் மூலம் பெறப்படும் நிதியானது மலையகம் மற்றும் வட கிழக்கு எல்லையோர கிராமங்களின் நிவாரண நிதிக்கு ஒதுக்கப்படும்.

மன்னர் மன்னன் ஒரு எழுத்தாளர், வரலாற்றாசிரியர், ஆராய்ச்சியாளர். ஊடகவியலாளர், நாணயவியல் நிபுணர், பயிற்று கல்வி அறக்கட்டளையின் நிறுவனர், யூடியூபர் மற்றும் ஏறத்தாழ 5000 நாணயங்கள், முத்திரைகள் மற்றும் பழங்காலப் பொருட்களின் கணிசமான சேகரிப்புக்குச் சொந்தக்காரர்.

தமிழ்நாட்டின் வரலாற்றையும், ஒட்டுமொத்த இந்திய வரலாற்றையும் ஆராயும் வகையில் அவரது நாணயங்கள் சேகரிப்பு கணிசமானது. Cash என்ற சொல்லின் தோற்றம் ‘காசு’ என்ற தமிழ் வார்த்தையிலிருந்து உருவானது என்பதை அவர் தனது நாணய ஆராய்ச்சி மூலம் நிரூபித்துள்ளார்.

அவர் இதுவரை 8 புத்தகங்களை எழுதியுள்ளார் மற்றும் மன்னர் மன்னனின் அனைத்து புத்தகங்களும் வரலாற்றைப் பற்றிய துல்லியமான ஆய்வுத் தரவை வழங்குகின்றன.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்