10.4 C
Norway
Saturday, April 27, 2024

பூமியின் வட்டப்பாதை அருகே கண்டுபிடிக்கப்பட்ட 30 ஆயிரம் சிறுகோள்கள்!

பூமியின் வட்டப்பாதை அருகே கண்டுபிடிக்கப்பட்ட தனது பாதையில் செல்லும் சிறுகோள்கள் எண்ணிக்கை 30 ஆயிரம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, கிரக பாதுகாப்புக்கான அதன் தற்போதைய பணியை நிர்வகிக்க கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம் (பிடிசிஓ) ஒன்றை நிறுவி உள்ளது.

இந்த அமைப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் விண்கலம் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பியது. அந்த விண்கலம், பூமிக்கு ஆபத்து ஏற்படுத்தும் என கணிக்கப்பட்ட டிடிமோஸ் பைனரி என்ற சிறுகோளை கண்டுபிடித்தது.

அது பூமி மீது மோதி விடாமல் தடுத்து அதனை திசைதிருப்ப நாசா சோதனை அடிப்படையில் முயற்சிகளை மேற்கொண்டது.

இதன்படி, அந்த விண்கலம் சிறுகோள் மீது மோத செய்யப்பட்டது. இதனால், அந்த சிறுகோளால் பூமிக்கு ஏற்படவிருந்த ஆபத்து முறியடிக்கப்பட்டது.

இது நடந்து ஒரு சில நாட்களில் ஐரோப்பிய விண்வெளி கழகம் வெளியிட்டுள்ள செய்தியில்,

பூமியின் வட்டப்பாதை அருகே தனது பாதையில் செல்ல கூடிய சிறுகோள்களின் எண்ணிக்கை 30 ஆயிரம் என்ற அளவில் அட்டவணைப்படுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.இவற்றில் பல விண்கற்கள் கடந்த 10 ஆண்டுகளில் கண்டறியப்பட்டவை என்றும் கூறப்படுகிறது.

இந்த சிறுகோள்கள் நம்முடைய பூமியின் சுற்று வட்டப்பாதையில் 45 மில்லியன் கி.மீ. தொலைவுக்குள் வர கூடியவை. சூரிய குடும்பத்தில் இதுபோன்ற குறுங்கோள்கள் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவை பரவியுள்ளன என வானியலாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்