4.2 C
Norway
Sunday, April 21, 2024

23.03.24 அன்று நடைபெற்று முடிந்த கரப்பந்தாட்டப் போட்டிகள்

23.03.24 சனியன்று பேர்கன் தமிழர் விளையாட்டுக் கழகத்தால் நடாத்தப்பட்ட  கரப்பந்தாட்டப் போட்டிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தன.

போட்டிகள் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகின. Setup / Over முறையில் போட்டிகள் நடைபெற்றன. குழுப்போட்டிகள் League முறையில் நடைபெற்றன, அதில் முதலாம், இரண்டாம் இடத்தைப் பெற்ற கழகங்கள் இறுதிப்போட்டியில் மோதின.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற setup இறுதி ஆட்டத்தில் Bergen Vest – Atletico அணியினர் மோதிக்கொண்டனர், இவ்வாட்டத்தில் மிகவும் சிறப்பாக விளையாடி முதலாம் இடத்தை Bergen Vest அணியினர் பெற்றுக்கொண்டனர்.

இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட Atletico அணியினர்.
முதலாம் இடத்தை பெற்றுக்கொண்ட Bergen Vest அணியினர்.

Overgame போட்டியில் Newstars White – சுபன் விளையாட்டுக் கழகம் இறுதி ஆட்டத்தில் மோதிக்கொண்டன. இவ்வாட்டத்தில் Newstars White கழகம் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டன.

இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட சுபன் அணியினர்.

முதலாம் இடத்தை பெற்றுக்கொண்ட Newstars அணியினர்.

வெற்றி பெற்ற கழகங்களுக்கு எமது வாழ்த்துக்கள்.

Related Articles

Latest Articles

துயர் பகிர்வுகள்