
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே பேர்கனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.முத்தையா சாந்தகுமார் அவர்கள் 22.11.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற முத்தையா, நல்லம்மா அவர்களின் சிரேஸ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, தெய்வானைப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகனும்,
தமயந்தி அவர்களின் அன்புக்கணவரும்,
Dr.சகானா, Dr.பிரியங்கன்,பிருந்தாபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஆறில், Dr.கிரிஷ்மா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
புஸ்பா, ஜெயந்தி, சகுந்தலா, சுமதி, சாந்தி, சுகந்தி, காலஞ்சென்ற சுதர்சினி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற தனபால், மூர்த்தி, கேசவன், ராஜன், ஜஸ்ரின், சிறீ ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 29.11.2022 அன்று 18.00 – 20.00 மணிவரை Haukeland sykehus (1ம் மாடி) 5021 Bergen இல் வைக்கப்பட்டு, ஈமைக்கிரியைகள் 06.12.2022 அன்று காலை 10.30 மணியளவில் Møllendalsveien 56B (Store Kapell) 5009 Bergen இல் நடைபெறும் என்பதை அறியத் தருகிறோம்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தமயந்தி 46859893, சகானா 95081451, பிரியங்கன் 97602664, பிருந்தாபன் 95081387
தகவல் : மனைவி, பிள்ளைகள், மருமக்கள்